Showing posts with label Tamil Posts. Show all posts
Showing posts with label Tamil Posts. Show all posts

Monday, January 30, 2012

இன்னாப்பா இது !


இன்னாப்பா இது !

மாசம் பொறந்து ஒரு மாசம் கூட ஆவல !

அதுக்குள்ள FEBRUARYஆ?

Sunday, August 14, 2011

பணம்


நன்றி ( இணையதளம்)

பணம்தான் பணம்தான்னு சொன்னாங்க - இல்லையின்னா
நாய் கூட மதிக்காது இன்னாங்க 
பணம்தான் பணம்தான்னு சொன்னாங்க - இல்லையின்னா
பிச்சைதான் வாழ்க்கை பூரா இன்னாங்க 

குணம்தான் குணம் தானுன்னு சொன்னேங்க - நான் 
சாகும் வரை அது காக்கும் இன்நேங்க
குணம் தான் குணம் தானுன்னு சொன்னேங்க இப்போ
தப்புன்னு  உணர்ந்து வருந்தி நின்னேங்க

----
பிறக்கையில பணம் வேணும் தெரியுமா - அடடா
மணக்க கூட பணம் வேணும் பெரியம்மா 

வளர்க்க பணம் வேணும் - உடுக்க பணம் வேணும் 
பசிக்கு  பணம் வேணும் - படிக்க பணம் வேணும் 

கட்டையிலே போகும் நேரம் வரும்போது -  நீ
கட்டையிலே போகும் நேரம் வரும்போது

பணம் இல்லையினா.. அடக்கம் கூட கிடையாது !
பணம் இல்லையினா.. அடக்கம் கூட கிடையாது !   

---

அஞ்சுலே இத்த நீயும்  உணரணும் - உன்
நெஞ்சிலே உரத்த போட்டு  வளர்க்கணும்

பிஞ்சிலே பழுத்ததுன்னு சொன்னாலும் - நீ
அஞ்சு -  பத்து  தினம் சேர்க்க பழகணும்

துன்னுரத  கொரைக்கணும் - தூங்குறத மறக்கணும் 
சுத்துரத நிறுத்தணும் - வெட்டி பேச்சு கொரயணும்!

இப்படியே பணத்த நீயும் சேர்தாக்க - அத 
பொட்டியிலே போட்டு வெச்சு வாழ்ந்தாக்க - அட 

அம்பது அருவதெல்லாம் கொண்டாட்டம் - உயிர்
போகும் நேரம் இல்லை இல்லே திண்டாட்டம்!

அம்பது அருவதெல்லாம் கொண்டாட்டம் - உயிர்
போகும் நேரம் இல்லை இல்லே திண்டாட்டம்!

Sunday, May 09, 2010

தமிழன் எழுந்தால்...

TV கொடுத்து ஒட்டு வாங்கலாம்
அரிசி கொடுத்து ஒட்டு வாங்கலாம்
அட.
துட்டு கொடுத்து கூட ஒட்டு வாங்கலாம்


பிரச்சனை வந்தால்...

அமுக்கி வாசிக்கலாம்
"தமிழ்" பெயர் சொல்லி பேச்சை மாற்றலாம்
உடன் பிறப்புக்கு கடிதம் எழுதலாம்
பட்டையை சாடலாம்
தலித், தலித் என தண்டோரா போடலாம் 

ஆனால்...

தமிழன் வெகுண்டு எழுந்தால்..

கோவணம் காலி...ஜாக்கிரதை !

நிற்க - தமிழன் வெகுண்டு எழுந்த சரித்திரம் இருக்கா?

Saturday, March 20, 2010

சாயிராம் !



இந்த மாதிரி சட்டம் நம்ம ஊர்ல இருந்தா..
அப்பப்பா நாடு எப்படி இருக்கும்!

இந்த மாதிரி சட்டம் நம்ம ஊர்ல இருந்தா..
அப்பப்பா நாடு எப்படி இருக்கும்!

இந்த மாதிரி சட்டம் நம்ம ஊர்ல இருந்தா..
அப்பப்பா நாடு எப்படி இருக்கும்!

Sunday, March 07, 2010

என்றோ படித்தது !

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல்.

பொருள்:

அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம்.
முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம்.
பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம்.
அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.

நன்றி - WIKIPEDIA

Thursday, March 04, 2010

தப்பு

ராகு காலம் - தப்பு
எம கண்டம் - தப்பு
குளிகை - தப்பு
மேற்க போனால் - தப்பு
கிழக்க போனால் - தப்பு
வடக்க - சூலம் - தப்பு
தெக்க - சூலம் - தப்பு

பல்லி விழுந்தால் - தப்பு
பூனை குறுக்க போனால் - தப்பு
காக்கா தலையில பேணால் - தப்பு
காக்கா - இடம் போனால் - தப்பு
காக்கா - வலம் போனால் - தப்பு

போகும் போது கூப்பிட்டால் - தப்பு
தடுக்கினால் - தப்பு
விக்கினால் - தப்பு
விதவை எதிரில் வந்தால் - தப்பு
வேண்டாதவன் எதிரில் வந்தால் - தப்பு

நாய் அழுதால் - தப்பு
ஆந்தை அலறினால்- தப்பு
எருமை மாடு வந்தால் - தப்பு
எதிரில் பிணம் வந்தால் - தப்பு

வாஸ்து
கிரக பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
சகுனம்
தோஷம்
ஜாதகம்
சுவடி
ஏழரை நாட்டு சனி
எட்டுல சனி
செவ்வாய் தோஷம்

இதை எல்லாம் நம்பும் நம் ஜனம்!
இதனால் வாழும் திருடர் உலகம்!

Sunday, February 21, 2010

வாழ்க்கை

வயசாச்சு
தலை எல்லாம் நரைச்சாச்சு
கை கால்கள் ஒஞ்சாச்சு
ஏன் வாழ்க்கை? என்றாச்சு

மனைவி மக்கள்
அண்ணன் தம்பி
உறவெல்லாம் போயாச்சு
தாய் தந்தை நண்பர் மட்டும்
இனி என ஆயாச்சு!

கவிஞர் பாடியதென்றாலும் இதை
உணரும்போது வலிக்கிறதே
உலகம் எல்லாம் இதுதானே - ஆனால்
நமக்கென வந்தால் கசக்கிறதே

போதும் போதும் தெய்வங்களே
வாழ்க்கை போதும் - அழைத்திடுவீர்!

போதும் போதும் தெய்வங்களே
வாழ்க்கை போதும் - அழைத்திடுவீர்!

Saturday, January 23, 2010

ஒத்தையிலே நிக்குதே!


ஒத்தையிலே நிக்குதே
பனைமரத்த பாத்தியா?
கொத்து கொத்தாக் காய்க்குமுனு
கதை இருக்கே கேட்டியா?

காலம் மாறிப்போச்சு
தேகம் ஓஞ்சுப்போச்சு
கொத்துக்கொத்தாக் காச்சதெல்லாம்
கட்டுக் கதை ஆகி போச்சு
---

இரவும் பகலும் தனிமையில் வாடுது
உறவை எண்ணி அங்குமிங்கும் தேடுது
மழையிலும் குளிரிலும் நடுங்குது ஏங்குது
விழிகளின் வழியே, கண்ணீர் வடிக்குது

எட்டு பத்து வருஷம் முன்பே
வெட்டி புட்டான் அதன் இனத்தை
ஒன்றை மட்டும் எனோ இங்கு
தன்னந்தனியே விட்டு வெச்சான்!
--

மனைவி, மக்கள், பேரன் பேத்தி
மனித இனம் மட்டும் வளருது,பெருகுது
காடு மேடு - வீடு என்ற பேரில்
பாலை ஆகுது மரங்களின் அழிவினால் !

தப்பு தவறுன்னு அறிந்தோர் சொல்லியும்
வெட்டுது உலகம் சொத்துக்கும் பத்துக்கும்!
குத்தம் என மேடையில் அரசியல் பேசியும்
மொத்தமும் வீணே என உலகமே ஏசுது!
--

தடுத்திட இனி இங்கு கடவுள்தான் வரணும்
படைத்தவன் அவன் தான் மக்களை மாத்தணும்
அதுவரை பாவம் - பனைகளும் பயிர்களும்
உலகில் இடம் இன்றி மெல்ல மெல்ல அழியும்
--

Wednesday, January 13, 2010

கடவுள்



கடவுள்

மனித இனம் உருவாக்கிய
ஒரு அப்பட்டமான பொய்!

உண்மையிலே கடவுள் இருந்தால்...

HAITI யில் பல லட்சம் மக்களுக்கு
இந்த கதி வந்திருக்குமா?

கடவுள்...

மனித இனம் உருவாக்கிய
ஒரு அப்பட்டமான பொய்!

மனிதா...

உன்னை நம்பு
உன் உழைப்பை நம்பு

கோயிலுக்கு போகாதே..
இதயக் கோவிலில் அன்பை வளர்த்துக்கொள்

வாழ்வாய் நீ...
வாழும் நம் உலகம்...

Wednesday, October 07, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே

கங்கையில் இறந்தவர் உடல் !!

நன்றி - The Hindu


இறந்தவர் சொர்க்கம் போனாரா ?
கடவுளுக்கு தான் தெரியும்!

இருப்பவருக்கு இந்த காட்சி
நரகம் தான்!

என்ன மூட நம்பிக்கைகளோ!

Sunday, October 04, 2009

சிவ ராத்திரி

அருகில் உள்ளோரின் குறட்டை
மர வீட்டின் கர்..முர்ர்..!

பக்கத்து வீட்டு குழாய் சொட்டல்
மூன்றாம் வீட்டு பூனையின் மியாவ்

நான்கு தெரு தள்ளி போலிஸ் சைரன்
பக்கத்து ஊர் செல்லும் ஊர்திகளின் சர்..புர்ர்..!

காற்றுடன் சண்டை - இலைகளின் திட்டு
பனி விழ - புல்லின் முனகல்

நேற்றைய PIZZA - வயிற்று உறுமல்

அமெரிக்க இரவில் ஒரு சிவராத்திரி !!

Wednesday, September 02, 2009

கை ஏந்தல்

Pic courtesy: WWW

சென்னை : தமிழகத்துக்கு, மாதம் 15 ஆயிரம் டன் துவரம் பருப்பு தேவைப்படுவதால், 6,000 டன் கனடா பருப்பை நேரடி இறக்குமதி செய்வதுடன், மத்திய அரசு மூலம் 2000டன் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


அன்று

என்ன வளம் இல்லை
எந்தன் திருநாட்டில்

ஏன் கையை ஏந்தவேண்டும்
வெளிநாட்டில் !!

இன்று

பருப்பு கூட இல்லை
எந்தன் திருநாட்டில்

கனடாவிடம் வாங்கிடுவோம்
முழு மூச்சில்!

Friday, August 28, 2009

தமிழ் வாத்தியார் - திரு.சந்திரசேகரன்!

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பள்ளிக் காலத்தில் தமிழ் இலக்கணம் என்றாலே பயம் தான்.

அதை போக்கியவர், எனக்கு 9,10,11 வகுப்புகளில் தமிழ் பயிற்றுவித்த திரு.சந்திரசேகரன், தமிழ் வாத்தியார் அவர்கள்.

தாம்பரம் கார்லி உயர்நிலைப் பள்ளியில் படித்த எவருக்கும் திரு.சந்திரசேகரன் அவர்களை நினைவிருக்கும்!

அவரது வகுப்பெடுக்கும் தோரணை, நேசம், ஊக்கம், நகைச்சுவை எல்லாம் இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

அவரை நான் கடைசியாக பார்த்தது - 1977 !

அவரைப் பற்றி உங்களுக்கு விவரம் தெரிந்தால்
தயவுசெய்து எனக்கு தெரியப் படுத்தவும்!

Wednesday, August 05, 2009

புதிய நாள்

நன்றி - WWW

விடியலின் மணிகள் ஒலித்திட
உலகம் நித்திரை கலைத்திட

துறவு ஆடையை அணிந்திட்ட
இரவும் களைப்புடன் மறைந்திட

நாளை என்று நேற்று எண்ணிய
இன்று கண்கள் விழித்ததோ

பூமிப் பெண்ணுடன் காதல் பேசிட

கதிரும் கிழக்கினில் உதித்ததோ !

Wednesday, April 08, 2009

தாய்ப்பாசம்

சமீபத்தில் ரசித்தது:

மழையில் நனைந்துகொண்டே வீட்டிற்கு சென்றேன்.

குடை கொண்டு போக வேண்டியது தானே என்றார் அப்பா !

எங்காவது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே என்றாள் அக்கா !

சளி பிடித்து சிரமப்பட போகிறீர்கள் என்றாள்
மனைவி !

என் தலையை தன் முந்தானையால் துவட்டி கொண்டே திட்டினாள் !!

என்னையல்ல... மழையை !!

என் தாய் !

Thursday, March 05, 2009

விடியல்

அன்று

வெள்ளையனிடமிருந்து நடு இரவில் பெற்றோம் - சுதந்திரம்

இன்னும் விடியலை !

இன்று

வெள்ளையனிடமிருந்து பெற்றோம் OUTSOURCING வேலைகள்

இரவெல்லாம் பகல்தான் இப்போ!

விடியல் ஏது?

Monday, December 01, 2008

பீலா மன்னர்கள்!

ஜோசியர் சொல்கிறார்!!

ஜோசியரே - நானும் சொல்லுவேன் நடந்து முடிந்த கதைகளை!! உம்மால் ஏன் சொல்ல முடியவில்லை - ஒரு வாரத்துக்கு முன்...மும்பையில் தீவிரவாதம் நடக்கும் என்று?

ஏன் என்றால் - ஜாதகம் ஜோசியம் எல்லாம்..பீலா!!
ஊரை ஏமாற்றும் வித்தை !

நாட்டில் எந்த ஜோசியராவது மும்பையை பற்றி சொன்னார்களா? இல்லையே!! ஏன்!!!

மக்களை ஏமாற்றும் கலை - ஜோசியம்!!

பாரதி பிறந்த மண்ணில் பேதமை!!
கேவலம்!!!

Sunday, November 16, 2008

சட்டக் கல்லூரி - சதுரங்க மேடை

சட்டக் கல்லூரியில் கலாட்டா, அடிதடி. இது இன்று நேற்று தோன்றிய கலாச்சாரம் அல்ல!

நான் பள்ளி கல்லூரியில் படிக்கும் பொழுதே தொடங்கிய ஒரு கேவலம் தான்..நாளாக நாளாக பூதமாக வளர்ந்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது.

இதற்கு காரணம் யார் ? முக்கியமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தான். கல்லூரிகள் அரசியல்வாதிகளின் பகடைக்காய்கள். அவர்கள் ஆட்ட ஆட்ட ஆடும்..மாணவர்கள் (பல ரவுடிகள் மாணவர் வேஷம் அணிந்து ) நூலில் ஆடும் பொம்மைகள் தான் !!!

இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பொதுஜனம்.

சென்ற வாரம் நடந்த அமளியில் போலீஸ் வேடிக்கை பார்த்தது கண்டு பலர் சீறுவது புரிகிறது. அங்கும் அரசியல் ஆதிக்கம் தான் !!

இந்தியாவில் இன்று போலீஸ் ஒரு கை இல்லாத பொம்மை!! பல கொலைகள், பல சட்ட விரோத செயல்கள் யாரும் கேட்பாரற்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தான்.

சரி...இவை மாற என்ன செய்யலாம்.! முதலில் அரசியல் மாற்றம், மக்களிடையே விழிப்புணர்வு (மாணவர்கள் உட்பட) எல்லாம் வேண்டும்.

இந்த அவலத்தை படம் பிடித்து, எழுதி மக்களுக்கு அளித்த தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள். ஜனநாயகத்தில், செய்தி நிறுவனங்களுக்கு பெரும் இடம் இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் ஜனநாயகம் வளர ஒரு முக்கிய இயந்திரம்.

எனக்கு இந்த தலைமுறை இளைவர்களிடம் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. இருந்தும்...மாற்றம் வரும் என்று ஒரு சிறு நம்பிக்கை இதயத்தில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது.

விரைவில் வந்தால்..நாட்டுக்கு நல்லது. இல்லையேல்.....!!!