Sunday, September 20, 2009

உன்னைப்போல் ஒருவன்

நன்றி - WWW

வெள்ளை அடித்து கலர் சாயம் பூசின நொள்ளைகளுக்கு பதினைந்து கொடுத்து மகிழ்ந்ததுண்டு !

கருப்புகளை, வெள்ளையாக, அருமையாக! சவுக்கடி போன்ற வசனங்களுடன், நடிப்பில்லாமல் வாழ்ந்து, அறவே சதையம்சத்தை துறந்து, மறக்கவே முடியாத ஒரு ஓவியத்தை வடித்த

கமலுக்கு நன்றி !

லாலுக்கு விருது நிச்சயம்!
ஸ்ருதிக்கு எதிர்காலம் சத்தியம்!

தமிழ் சினிமா வாழ ஒரு
கமல் !

3 comments:

(Mis)Chief Editor said...

படம் நெடுகிலும் கூண்டில் அடைபட்ட வேங்கையாய் உறுமும் 'மாரார்' நமக்குப் புதுசு. கமிஷனர் 'மாரார்' முன்னிலையில் 'common man' கொஞ்சம் 'stupid'-ஆகத்தான் படத்தில் தெரிகிறார். மோகன்லாலின் மற்றுமொரு பரிணாமத்தை வெளிப்படுத்தி, தன்னை மேம்படுத்திக் கொண்ட கலைஞன் கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சபாஷ்!

சற்றே கூன் விழுந்த தோற்றம். கறுப்பும் வெளுப்புமாய் தலை. நேர்த்தியான மீசை. சராசரி மனிதன் போடும் கண்ணாடி. கண்களில் அப்படி ஒரு தீட்சண்யம். தோற்றத்தில் முதுமை இருந்தாலும், பேச்சில் 'தோற்றுப் போன/கையாலாகாத' வருத்தம் + 'என்னாலும் முடியும்' கோபம். இப்படி ஒரு பாத்திரத்தை நஸ்ருதீன் ஷா ஏற்றுச் செய்ததை கமலஹாசன் ஏன் செய்ய வேண்டும்? செய்யத்தான் முடியுமா? என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான் இருக்க முடியும்.

நல்ல விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் 'மாசு குறையாமல்' ஜனங்களுக்கு எடுத்துச்செல்ல / எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற வெறி.

பொன்விழா நாயகர் வாழ்க பல்லாண்டு!

(Mis)Chief Editor said...

தமிழ் சினிமாவின் போக்கை ஆராய்பவர்கள் சகலகலா வல்லவன் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தது என்று சொல்வார்கள்....

இப்போது அயன் மாற்றுகிறதே. அந்த மாதிரி படங்களை எடுத்துகிட்டுத்தான் இருப்பார்கள். நான் ஒரு தடவைதான் செய்தேன். ரஜினிகாந்தின் முழு கேரியரும் அதுதானே? ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் தவிர அவர் செய்து கொண்டிருக்கிற அத்தனையும் அதுதானே. பக்கத்தில் ஒருத்தர் தன் வாழ்க்கையையே அதுவாக வைத்துக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றி முதலில் பேசுவோம். பிறகு சகலகலா வல்லவன் பற்றி பேசலாம்.

-கலைஞன் கமலஹாசன் அவர்கள் பேட்டியிலிருந்து, த சண்டே இந்தியன், மாதமிருமுறை

Anonymous said...

sir, please watch the original hindu version!