Sunday, March 02, 2008

சுஜாதாவுக்கு - ரா.கி.ரங்கராஜன் அஞ்சலி

புதிய எழுத்தாளர்கள் அவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதுவது உண்டு. அவ்வளவு ஏன்... ஆரம்ப காலத்தில் நானே அவரைப்போல எழுதிப் புகழ்பெற வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்பட்டதுண்டு.

அவருடைய நுட்பமான அறிவு, அளவிட முடியாத உழைப்பு, படிப்பு, நட்பு வட்டாரம், பெரிய இடத்துப் பழக்கவழக்கங்கள் இவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எனக்கு வராது என்பதை உணர்ந்து, அவரை முந்தவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டேன்.

மரணம் ஒன்றில்தான் அவரை முந்த முடியும் என்று எண்ணியிருந்தேன்.

அதையும் பொய்ப்பித்துவிட்டார் என் அருமை நண்பர் சுஜாதா!

1 comment:

Sumi said...

How true! Who else can write like Sujatha other than Sujatha himself! Like many others, his death has created such a deep void in me too. I have developed deep ineterst in Tirupavai, Tiruvembai etc after I started reading his ''Varam oru pasuram''. His writings speak for his amazing humaness. Narayan sir, could yu write more about Sujatha's works, your favorite books etc. It would help people like me to go grab his bookand preserve it in our book shelf.