Showing posts with label depression. Show all posts
Showing posts with label depression. Show all posts

Saturday, November 17, 2007

சலவை செய்த உள்ளம்

"சலவை செய்த உள்ளம் வேண்டும்"
இறைவனைக் கேட்டேன்.

"அளவைச் சொல் " என்றான் இறைவன்.

" முழுதும் " என்றேன் நான்.

" மடையா - அறிவு எங்கே?
உடையா இது ?
தினம் மாற்ற " ?

"ஐயா" ...என்றேன் நான்.

" நான் கொடுத்ததே சுத்த வெள்ளை இல்லை
இன்றைய உலகில் வெள்ளை வேலை செய்யாது
வெள்ளையை கருப்பாக்கு
உறுப்படுவாய் "


- மறைந்தார் இறைவனார்!