Friday, March 05, 2010

நித்யானந்தா

தனி ஒரு மனிதனின் படுக்கை அறையில் CAMERA வைத்து படம் பிடித்து, தொலை காட்சியில் CENSOR இன்றி போட்டு காட்டிய...தொலைகாட்சி நிலையங்களை முதலில் COURT இல் நிறுத்தவேண்டும். அதற்கு முன் செருப்பால் அடிக்க வேண்டும் !

நித்யானந்தா போன்ற சாதாரண மக்கள் இந்த நிலையை அடையக் காரணம் யார்? நம்மைப் போன்றோர் தானே? அதை மக்கள் முதலில் உணர வேண்டும்.

என்னை பொறுத்தவரை..நித்யானந்தாவின் படுக்கை அறையில் நடந்த ராசலீலை ..இரண்டு பேருடைய சொந்த பிரச்சனை ! நித்யானந்தா கொள்ளை அடித்தானா? பலாத்காரம் பண்ணினானா? யாரையாவது ஏமாற்றினானா? அப்படி செய்திருந்தால்...அவனை உள்ளே வைக்கலாம் !

நிற்க - கொலை, கொள்ளை அடித்த (கொண்டிருக்கும்) பலர், கேட்பார் இன்றி ஜாலியாக உலா வருவது உலகுக்கே தெரியும் !! முதலில் அவர்களை இந்த மாதிரி CAMERA மூலமாக படம் பிடித்து ..உலகுக்கு காட்டுங்களேன் ...! தொலைகாட்சிகளே !

8 comments:

Jeevan said...

We all believe in media, and they must be certain about there delivery and dignity. It should be an awareness tool, but not to spoil minds by showing obscene scenes. It should be produced before law, if they truly care about people.

Balaji S Rajan said...

I heard these scenes are repeatedly shown in private television which is viewed by the whole families in India. As you said, it is a man's private life. It was only the people who considered him holy, and went pouring their money on such people. First people should change their beliefs on self made godly men. The root cause is fear, and lack of self belief. Every human being have to believe themselves first. Our society in India, need to learn lot of things. Why do people go to such men? Because they lack confidence in themselves. They are indecisive and do not know how to progress with their difficulties. They think such Gurus, will give them mental peacefulness and solve their problems. Firstly, they should gain confidence on themselves and avoid following some one else. Again, there is a culture of mass following. This should be avoided. People are losing their capacity to think and foolishly follow such people. Again, they need to look at them as only individuals. Certain sect of people make use of such people and start making hay while the sun shines.

Anonymous said...

Can we say this is a clear case of prostitution under the guise of godman ? If thats the prima facie, then he is punishable by law.

Narayanan Venkitu said...

Anon - First define Prostitution and then see if this fits into that category ?

Who said, Godmen can't have sex..! and what is the definition of GODMEN?

வீ.புஷ்பராஜ் said...

ஒரு முன்னறிவிப்புடன் ஓரிருமுறை மட்டும் காட்டிவிட்டு விட்டிருந்தால் அது ஊடக தர்மமாக (மட்டும்) இருந்திருக்கும். ஆனால் சன் டிவி அரைமணிக்கொருமுறை மறுஒளிபரப்பு செய்துகொண்டே இருந்ததுடன், அடுத்தநாள் தமிழகமே கொந்தளித்து தெருவில் இறங்கி போராடுவதைபோல பிரச்சினையை சென்ஷேஷன் செய்து கொண்டிருந்தார்கள். அதில் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.(இருவருக்கும் கர்நாடகாவில் நிலத்தகராறு இருப்பதாக சொல்கிறார்கள். முழுவிவரங்கள் தெரியவில்லை).

/என்னை பொறுத்தவரை..நித்யானந்தாவின் படுக்கை அறையில் நடந்த ராசலீலை ..இரண்டு பேருடைய சொந்த பிரச்சனை !/

தான் இகபரசுகங்களை வென்றுவிட்டதாக அறிவித்து, பக்தர்களிடம் பிரம்மச்சரியம் ஏற்றுக்கொண்ட மேன்மையான துறவுநிலையை வலியுறுத்தி, அதன்படியே பல இளைஞர்களையும் துறவிகளாக்கி போட்ட கபடவேடம்தான் நித்தியானந்தா விஷயத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக் காரணம். இவரை கண்மூடித்தனமாக பின்பற்றிய அப்பாவிகள் பலர் நாணி குறுகி நிற்கிறார்கள்.

உதாரணமாக: என் வீட்டின் எதிர் வீட்டு காம்பௌண்டில் குடியிருக்கும், இரண்டு குழந்தைகளுடன் பிழைக்கும் நிராதரவான பெண் ஒருவர் தீவிரமான நித்தியானந்தா பக்தை. என்னிடம் உரையாடிய ஒரு பொழுதில் சுவாமியை முழுமையாக நம்புவதாகவும், அவர்தான் இனி தங்கள் வழிகாட்டி என்றும் சொன்னார். அதில் ஒப்புவித்தலின் பூரணத்துவம் இருந்தது. ஆனால் விஷயம் இப்படியாக வெளிப்பட்டதும், வீட்டை விட்டு வெளியே வரவே வெட்கப்பட்டு இரண்டு நாட்கள் உள்ளேயே முடங்கி கிடந்தார்கள். அவர் மீது செக்ஸ் சாமியாரின் பக்தை என்று முத்திரை விழுந்தது விழுந்ததுதான். இதையே நித்தியா ஓஷோபோல செக்ஸையும் அனுமதித்த ஒன்றாக வைத்துக் கொண்டிருந்தால் இவ்வளவுதூரம் அப்பாவிகளுக்கு பிரச்சினை இருந்திருக்காது.

திடீரென்று ஓரிரவில் இரு மாநில அரசுகளும் சட்டத்தை தன் கடமையை செய்ய அனுமதித்திருப்பது, இத்தனை நாள் எங்கேயா போனீங்க என்றுதான் கேட்க வைக்கிறது.

Balaji S Rajan said...

Pushparaj,

I like your matured thoughts and comments.

Subu said...

ஒரே வழிதாண்ணே

சாதி சங்கம், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் சங்கம், ஆசிரியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், செருப்பு தைப்போர் சங்கம், செருப்பு வாங்குவோர் சங்கம் (அதாங்க நுகர்வோர் சங்கம் ) ..அந்த சங்கம் ..இந்த சங்கம் போல, சாமியார்கள் சங்கம் ஆரம்பிச்சு பொழைக்கிறது தான் ...ஒரே வழி

வேலையே செய்யாத பேங்க சிப்பந்தியை யாராவது ஏன்னு கேக்க முடியுமா ?

நீண்ட பின்னூட்டை படிக்க
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_6005.html

Madhuram said...

I too was shocked seeing the video being telecasted so elaborately in prime time TV. These days media seems to have no sense of social responsibility. All they want is to give sensational news and make money at any cost. If they really had some sort of good intention to tell the rest of the world that something is not right, they should have taken the CD to the Police and they could have just mentioned in the news that they have found something very disturbing about that person and the ashram and the police are investigating. The way they have been telecasting clearly shows that there has been some monetary give and take which has not materialized which has irked some of them and the video has gone public.