Saturday, January 23, 2010

ஒத்தையிலே நிக்குதே!


ஒத்தையிலே நிக்குதே
பனைமரத்த பாத்தியா?
கொத்து கொத்தாக் காய்க்குமுனு
கதை இருக்கே கேட்டியா?

காலம் மாறிப்போச்சு
தேகம் ஓஞ்சுப்போச்சு
கொத்துக்கொத்தாக் காச்சதெல்லாம்
கட்டுக் கதை ஆகி போச்சு
---

இரவும் பகலும் தனிமையில் வாடுது
உறவை எண்ணி அங்குமிங்கும் தேடுது
மழையிலும் குளிரிலும் நடுங்குது ஏங்குது
விழிகளின் வழியே, கண்ணீர் வடிக்குது

எட்டு பத்து வருஷம் முன்பே
வெட்டி புட்டான் அதன் இனத்தை
ஒன்றை மட்டும் எனோ இங்கு
தன்னந்தனியே விட்டு வெச்சான்!
--

மனைவி, மக்கள், பேரன் பேத்தி
மனித இனம் மட்டும் வளருது,பெருகுது
காடு மேடு - வீடு என்ற பேரில்
பாலை ஆகுது மரங்களின் அழிவினால் !

தப்பு தவறுன்னு அறிந்தோர் சொல்லியும்
வெட்டுது உலகம் சொத்துக்கும் பத்துக்கும்!
குத்தம் என மேடையில் அரசியல் பேசியும்
மொத்தமும் வீணே என உலகமே ஏசுது!
--

தடுத்திட இனி இங்கு கடவுள்தான் வரணும்
படைத்தவன் அவன் தான் மக்களை மாத்தணும்
அதுவரை பாவம் - பனைகளும் பயிர்களும்
உலகில் இடம் இன்றி மெல்ல மெல்ல அழியும்
--

1 comment:

Jeevan said...

ஒத்தையில நிக்குது ஆள்காட்டி விரல போல
இன்றைய தலைமுறைக்கு ஆடாம அசையாம எதுத்துக்காட்டா.