'தென்னாட்டுப் போர்க்களங்கள்' என்னும் ஒரு சுவாரசியமான புத்தகத்தை படித்து வருகிறேன்.
சமீபத்திய சென்னை பயணத்தின் போது ஹிக்கின்பாதம்ஸில் வாங்கினேன்.
பல்லவர்களை பற்றி எழுதுகையில் ஒரு ஆச்சரியமான, அதிர்ச்சியான விஷயத்தை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்.
'கணபதி அதாவது பிள்ளையார்' வழிபாடு 7வது நூற்றாண்டில் தொடங்கியதாம்! பரஞ்சோதியார் (நரசிம்ம பல்லவரின் தளபதி), சாளுக்கியரை வென்ற பின், வாதாபியிலிருந்து ஒரு பெரிய பிள்ளையார் சிலையை கொண்டு வந்து கோவில் கட்டினாராம் !
அதன் பின்னே தான், பிள்ளையார் வழிபாடு தென்னாட்டில் தொடங்கியதாம்!
'வாதாபி கணபதிம் பஜேகம்..' என்ற பிரபலமான கர்நாடக இசைப்பாடல் இதற்கு ஒரு சான்று என்றும் எழுதியுள்ளார் ஆசிரியர்.
தென் இந்திய சரித்திரத்தில் ஈடுபாடு உள்ளவர் அனைவரும் படித்து மகிழ வேண்டிய புத்தகம் 'தென்னாட்டுப் போர்க்களங்கள்' .
எழுதிய - அப்பாத்துரையாருக்கு என் பணிவான வணக்கங்கள்

