Sunday, March 16, 2008

நியாய தர்மங்கள்

அப்பா அழுது நான் இதுவரை என் 22 வயது வாழ்வில் பார்த்ததில்லை !

'போயிட்டு வாம்மா !' துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டே அழுதார். அம்மா என்றும் இல்லாமல் இன்று கொஞ்சம் தைரியமாக இருந்தாள்.

பாட்டி பாதிக்கண்னால் பார்த்து..ஒரு கை தூக்கி பொக்கை வாயில் என்னவோ சொல்ல, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா, குழந்தைகள் கை அசைத்து வழி அனுப்ப..

சுரேஷ், விஜய், ஷங்கர், ராமா, பாலாஜி, சாரு, சித்ரா, அதிதி, ப்ரீதி மற்றும் நண்பர்கள் 'BYE..BYE' சொல்ல...

கனத்த மனதுடன், கன்னத்தில், கண்களில் நீருடன், கார் கதவை திறந்து ஏறிக்கொண்டேன். ராஜேஷ் மேல் சாய்ந்து கொள்ள கார் கிளம்பியது.

நான் பிறந்து, வளர்ந்து திரிந்த ஊர்..மெல்ல மெல்ல..பின்னால் மறைய..இதோ ஒரு 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராஜேஷ் வீட்டுக்கு....என் புகுந்த விட்டுக்கு..பயணம் ஆரம்பம்.

ஏன் டீ ரம்யா பெண்ணாகப் பிறந்தாய் ? ஏன்.. ஏன் ? எனக்குள் ஒரு கேள்வி.
--
( தொடரும் )
--