சென்னையில் நடந்த ஒரு சம்பவம்:
அவர் - கேள்விப்பட்டியா..அந்த பொண்ணு யாரோ வேறு சாதி பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம் ?
நான் - ஓ , அப்படியா - ரொம்ப சந்தோஷமான செய்தியா இருக்கே! ரொம்ப நாளாக ஆயில்ய நஷத்திரம் என்று தள்ளிண்டே போச்சே!
அவர் - என்ன...., சந்தோஷமா? பாவம் அவளோட அப்பா - என்ன கஷ்டப் பட்டு, படிக்க வெச்சு, பாவம் தலை குனிந்து போயிட்டார்.
நான் - என்ன இப்போ பிரச்சினை?
அவர் - என்னவா......., நம்ம CULTURE என்ன, அந்தச்து என்ன.....!!
==================
....சில நாட்களுக்கு பின்....அதே நபர்
அவர் - எங்க அம்மாவை (95 YEARS ) OLD AGE HOMEல விடணும் நல்ல HOME இருந்தால் சொல்லு.
நான் - என்ன HOME ஆ? நீங்க 4 BROTHERS ஆச்சே, 1 SISTER வேறு. பாத்துக்க ஆளில்லையா?
அவர் - இல்லை, பாத்துக்க முடியலை, ரொம்ப கஷ்டப் படுத்தறா!
நான் - போன வாரம், CULTURE பற்றி பேசினேளே! இது என்ன CULTURE?
அவர் - HEE....HEEE..HEEEEE!

