Please check it out.
****
It is a remix of two very famous songs
a) Paavana Guru ( Yesudas)
b) Vedham ( Salangai Oli / Saagara Sangamam)
======================================
என்னவள்
ஆடிடும் மயிலை கேள்
பாடிடும் குயிலை கேள்
வீசிடும் காற்றை கேள்
பேசிடும் நாற்றை கேள்
பூத்திடும் பூவை கேள்
பூவினில் வண்டை கேள்
என்னவளின் அழகை
கவி பாடி சொல்லும்
==
என்னவளின் பாதம்
தன் மேல் பதிய
பொன்னாய் மாறும்
மண்ணுலகம்
என்னவளின் தேகம்
மின்னுவதை கண்டு
விண்மீன்களும்
தன் நிலை இழக்கும்
==
என்னவளின் கூந்தல்
என்னவளின் இமைகள்
என்னவளின் கண்கள்
என்னவளின் கன்னம்
என்னவளின் நாசி
என்னவளின் உதடு
என்னவளின் தேகம்
என்றென்றும் என் சொந்தம்!